குடியுரிமை திருத்த மசோதா: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்


குடியுரிமை திருத்த மசோதா: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்
x
தினத்தந்தி 10 Dec 2019 8:08 AM GMT (Updated: 10 Dec 2019 8:08 AM GMT)

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாராளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த  மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். 

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. 

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில் மோடி அரசை விமர்சித்து கடுமையாக பதிவிட்டுள்ளார். 

இம்ரான் கான் கூறியிருப்பதாவது:-  இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட மசோதாவுக்கு நாங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம். இந்த மசோதா சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தை மீறும் வகையிலும், பாகிஸ்தானுடனான இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறும் வகையிலும் உள்ளது” என்று விமர்சித்துள்ளார். 

Next Story