ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த புயல் தாக்குதல் - 9 பேர் பலி


ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த புயல் தாக்குதல் - 9 பேர் பலி
x
தினத்தந்தி 10 Dec 2019 10:25 PM GMT (Updated: 10 Dec 2019 10:25 PM GMT)

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரின் மேற்கு பகுதியை பெல்னா என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலில் சிக்கி 9 பேர் பலியாகினர்.


* ரஷியா அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் முதல் முறையாக சந்தித்து பேசினர். இதில் கிழக்கு உக்ரைனில் அரசு படைக்கும், ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வரும் சண்டையை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்த இரு நாட்டு தலைவர்களும் சம்மதித்தனர்.

* ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கரின் மேற்கு பகுதியை பெல்னா என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலில் சிக்கி 9 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

* பாகிஸ்தான் தலீபான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்காவிட்டால் ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போர் ஒரு வாரத்துக்குள் முடிந்துவிடும் என அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.

* அல்ஜீரியா நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது அவ்யாஹியாவுக்கு ஊழல் வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அதே போல் மற்றொரு முன்னாள் பிரதமரான அபதல்மாலீக் செல்லாலுக்கு ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Next Story