குடியுரிமை மசோதா; கருத்து கூற ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு


குடியுரிமை மசோதா; கருத்து கூற ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு
x
தினத்தந்தி 11 Dec 2019 5:03 AM GMT (Updated: 11 Dec 2019 5:55 AM GMT)

மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேறியது குறித்து கருத்து கூற ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு தெரிவித்து விட்டது.

ஜெனீவா,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேறியது. 

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில்,  நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது.  குடியுரிமை மசோதாவுக்கு அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்சின் செய்தி தொடர்பாளர், இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா குறித்து கூறியதாவது:  “ உள்நாட்டு சட்ட நடைமுறை செயல்கள் மேற்கொள்ளப்படும் போது நாங்கள் கருத்து கூறுவது கிடையாது. அதேவேளையில், அனைத்து அரசுகளும் பாரபட்சமற்ற சட்டத்தை பின்பற்றுவதில் கவனமாக இருக்க  வேண்டும் என்பது குறித்தே  நாங்கள் அக்கறை கொள்கிறோம்” என்றார்.


Next Story