உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் - 6 பேர் படுகாயம் + "||" + Human bomb attack on the US air base in Afghanistan - 6 people injured

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் - 6 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் - 6 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமான தளத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
காபூல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்கு பகுதியில் பக்ரம் விமானப்படை தளம் உள்ளது. இங்குள்ள அமெரிக்க ராணுவத்தினரை குறிவைத்து இன்று மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. 

தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ராணுவ படைத்தளத்திற்கு அருகே, உள்ளூர் மக்களுக்காக கட்டப்பட்டு வந்த மருத்துவமனை கட்டிடத்தின் முன்பாக வெடிகுண்டை வெடிக்க வைத்தான். இதனால் மருத்துவமனை கட்டிடம் உட்பட அருகில் இருந்த குடியிருப்புகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.

இதனையடுத்து தாக்குதல் நடந்த இடத்தை அமெரிக்க ராணுவத்தினர் உடனடியாக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் பொது மக்கள் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில், இதை தலீபான் அமைப்பினர் நிகழ்த்தியிருக்க கூடும் என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்: நீதிபதி சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பயங்கரவாதிகள் தலைமை நீதிபதியை சுட்டுக்கொன்றனர்.
2. ஆப்கானிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 8 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.
4. ஆப்கானிஸ்தானில் ராணுவத்திடம் சரணடைந்த 59 தலிபான் பயங்கரவாதிகள்
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 59 பேர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு ராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.
5. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பிடியில் இருந்த 62 ராணுவ அதிகாரிகள் விடுவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பிடியில் இருந்த ராணுவ அதிகாரிகள் 62 பேர் சிறையை உடைத்து மீட்கப்பட்டனர்.