உலக செய்திகள்

பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சயீத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் + "||" + Hafiz Saeed indicted on terror financing charges

பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சயீத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சயீத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சயீத் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்,

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டங்களை வகுத்து கொடுத்து, மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத். இவர் பாகிஸ்தானின் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது அமைப்பை சேர்ந்த 12 பேரை கடந்த ஜூலை மாதம் 17-ந்தேதி பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் 3 பேர் மீது லாகூர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.