உலக செய்திகள்

வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி + "||" + Nobel laureate Abhijit Banerjee Come wearing in dhoti

வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி

வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி
இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் பானர்ஜி, வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்றார். அவரது மனைவியும் சேலையில் வந்து அசத்தினார்.
ஸ்டாக்ஹோம்,

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், அமெரிக்க பொருளாதார நிபுணருமான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டுப்லோ மற்றும் மைக்கேல் கிரிமர் ஆகிய 3 பேருக்கு இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.


பரிசளிப்பு விழா சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது. விழாவில் பரிசு பெற வந்த அபிஜித் பானர்ஜியும், அவரது மனைவியும் இந்திய பாரம்பரிய முறையில் உடையணிந்து வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அபிஜித் பானர்ஜி, தங்க நிற பார்டர் வைத்த வேட்டியும், கருப்பு நிற மேல் கோட்டும் அணிந்திருந்தார். அவரது மனைவி எஸ்தர் டுப்லோ பச்சை மற்றும் ஊதா நிற சேலையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார். இந்திய பெண்ணை போன்று எஸ்தர் புடவை அணிந்து வந்து பரிசு பெற்றது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. டுவிட்டரிலும் இந்த தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் அபிஜித் பானர்ஜி சந்திப்பு: பேசியது என்ன?
பிரதமர் மோடியை அபிஜித் பானர்ஜி சந்தித்து பேசினார். இருவரும் பேசியது என்ன என்பது பற்றி தெரிய வந்துள்ளது.
2. நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி டெல்லியில் தான் படித்த பல்கலைக்கழகத்தை பார்வையிட்டார்
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள அபிஜித் பானர்ஜி டெல்லி சென்றார். அங்கு தான் படித்த பல்கலைக்கழகத்தை அவர் பார்வையிட்டார்.
3. நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு வருகை
நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு இன்று வருகை தந்துள்ளார்.
4. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ‘அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர்’ - பியூஸ் கோயல் சொல்கிறார்
நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
5. 2019-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிப்பு
2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியர் உள்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.