உலக செய்திகள்

இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு? + "||" + Small Boris majority likely in election

இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு?

இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு?
இங்கிலாந்து தேர்தலில் சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு? உள்ளது என கருத்துக் கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
லண்டன்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து  விலகுவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தது. இதன் தொடர்ச்சியாக உடனடியாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. 650 உறுப்பினர்களைக் கொண்ட இங்கிலாந்து  நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெரேமி கார்பைன் தலைமையிலான தொழிலாளர் கட்சியுமே பிரதான போட்டியாளர்களாக கருதப்படுகிறது.

தேர்தலில்  மொத்தம் 3321 பேர் போட்டியிடுகிறார்கள். இதில், 1,124 பெண்களில் 227 பெண்கள் மட்டுமே சுயேட்சை வேட்பாளர்களாக உள்ளனர்.

அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி சவுத் ருசிலிப், யுக்ஸ் பிரிட்ஜ் ஆகியவையாகும்.

பிரெக்சிட் விவகாரமே இந்தத் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் என கணிக்கப்பட்டாலும், இரு கட்சியின் தலைவர்களும் இதுகுறித்து தங்கள் பிரசாரத்தில் பேசவில்லை. 

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின்படி போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

339 இடங்களை அந்தக் கட்சி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சிக்கு 231 இடங்கள் கிடைக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

ஆனால் சமீபத்திய கருத்து கணிப்பில் போரிஸ் கட்சிக்கு  அதிகபட்சமாக 28 இடங்கள் அதிகம் கிடைக்கும்  என கணிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை தொடங்கியது.

650 தொகுதிகளில்  533 தொகுதிகள் இங்கிலாந்திற்கு உட்பட்டதாகவும், 59 தொகுதிகள் ஸ்காட்லாந்திற்கு உட்பட்டதாகவும், 40 தொகுதிகள் வேல்ஸ்க்கு உட்பட்டதாகவும், 18 தொகுதிகள் வட அயர்லாந்திற்கு உட்பட்டதாகவும் உள்ளது. இதில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 635தொகுதிகளில் போட்டியிடுகின்றது. தொழிலாளர் கட்சி 631தொகுதிகளிலும், பிரெக்ஸிட் எதிர்ப்பு லிபரல் ஜனநாயகவாதிகள் கட்சி 611 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

வாக்கெடுப்புகள் நிறைவடைந்த பிறகு, எண்ணும்  பணி  தொடங்கும். பெரும்பாலான முடிவுகள் நாளை  அதிகாலையில் அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
இங்கிலாந்து பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் காணொலி வாயிலாக நாளை (மே 4) பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
2. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த மாத இறுதியில் இந்தியா வருகிறார்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த மாத இறுதியில் இந்தியா வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
3. எச்சரிக்கையை மீறி இங்கிலாந்து பிரதமர் ஸ்காட்லாந்து பயணம்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கையை மீறி இன்று ஸ்காட்லாந்து செல்லவுள்ளார்.
4. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேசினார்.