பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜெரோமி கோர்பன் ராஜினாமா


பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜெரோமி கோர்பன் ராஜினாமா
x
தினத்தந்தி 13 Dec 2019 4:03 AM GMT (Updated: 13 Dec 2019 4:03 AM GMT)

பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜெரோமி கோர்பன், தொழிலாளர் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

லண்டன், 

650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை  எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது.  வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், அதிக  இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன்  முன்னிலை பெற்றுள்ளார். இதனால், மீண்டும் அவர் பிரதமராவார் என்று  தெரிகிறது. 

இந்த நிலையில், இங்கிலாந்தின் எதிர்க்கட்சி தலைவரான ஜெரோமி கோர்பன் தொழிலாளர் கட்சியின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து, ராஜினாமா செய்திருப்பதாக தெரிகிறது.  

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 368 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் முடிவுகளிலும் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களில்  வெற்றி பெற்று வருகிறது. 


Next Story