உலக செய்திகள்

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மே 21-ந் தேதி சர்வதேச தேநீர் தினமாக அறிவிப்பு + "||" + May 21st is International Tea Day, accepting India's request

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மே 21-ந் தேதி சர்வதேச தேநீர் தினமாக அறிவிப்பு

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மே 21-ந் தேதி சர்வதேச தேநீர் தினமாக அறிவிப்பு
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மே 21-ந் தேதி சர்வதேச தேநீர் தினமாக ஐ.நா. பொதுச்சபை அறிவித்துள்ளது.
நியூயார்க்,

இத்தாலியில் உள்ள மிலான் நகரில் 2015-ம் ஆண்டு நடந்த உணவு மற்றும் விவசாய அமைப்பின் அரசுகளுக்கு இடையேயான குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சர்வதேச தேநீர் தினம் என ஒரு நாளை அறிவித்து கடைப்பிடிக்க வகை செய்ய வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது.


இதை ஐ.நா. சபை ஏற்றுக்கொண்டு விட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 21-ந்தேதியன்று சர்வதேச தேநீர் தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. பொதுச்சபை அறிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச்சபை விடுத்த அறிவிக்கையில், “சர்வதேச தேநீர் தினத்தை கடைப்பிடிப்பது தேயிலையின் நிலையான உற்பத்தி, தேயிலை பயன்பாடுக்கு ஆதரவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும், வளர்க்கும்; பசி மற்றும் வறுமையை எதிர்த்து போராடுவதில் அதன் முக்கியத்துவத்தைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். எனவே மே 21-ந் தேதி சர்வதேச தேநீர் தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது: சர்வதேச நிதியத்தின் தலைவர் நம்பிக்கை
இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது என சர்வதேச நிதியத்தின் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. “இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல்” - டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல் என டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் வெளியிட்ட “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.
3. இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.
4. இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை: மத்திய அரசு தகவல்
இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
5. இந்தியா, நேபாளம் இடையே சோதனை சாவடி: பிரதமர் மோடி, நேபாள பிரதமர் இணைந்து தொடங்கி வைத்தனர்
இந்தியா, நேபாளம் இடையே ஒருங்கிணைந்த சோதனை சாவடியை பிரதமர் மோடி, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஓலி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.