உலக செய்திகள்

அமெரிக்காவில் ஆசிய, பசிபிக் பகுதிக்கான நாடாளுமன்ற துணை குழு தலைவராக அமி பெரா நியமனம் + "||" + Indian-American Congressman Ami Bera Named Chairman Of Key Congressional Sub-Committee

அமெரிக்காவில் ஆசிய, பசிபிக் பகுதிக்கான நாடாளுமன்ற துணை குழு தலைவராக அமி பெரா நியமனம்

அமெரிக்காவில் ஆசிய, பசிபிக் பகுதிக்கான நாடாளுமன்ற துணை குழு தலைவராக அமி பெரா நியமனம்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான அமி பெரா, ஆசிய, பசிபிக் பகுதிக்கான நாடாளுமன்ற துணை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மான விவகாரத்தில், அவர் மீதான 2 குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின், நீதி குழு ஒப்புதல் அளித்துள்ளது. பதவி நீக்க தீர்மானத்தின்மீது பிரதிநிதிகள் சபையில் அடுத்த வாரம் ஓட்டெடுப்பு நடக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


* ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு நேற்றுமுன்தினம் நடந்த 3 தாக்குதல் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் ஒரு பாதிரியார், ஒரு உளவு அதிகாரி, ஒரு பெண் என 3 பேரின் உடல்களை தான் பார்த்ததாக உள்ளூர் ரேடியோ இயக்குனர் டேனியல் டிபாசிமா கூறினார்.

* அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான அமி பெரா, ஆசிய, பசிபிக் பகுதிக்கான நாடாளுமன்ற துணை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் பழமைவாத கட்சியை அமோக வெற்றி பெற வழிநடத்திய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஸ்காட்லாந்து சுதந்திரம் தொடர்பாக இரண்டாவது பொதுவாக்கெடுப்பு நடத்துகிற அவசியம் இல்லை, 2014-ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து மக்கள் இங்கிலாந்துடன் தொடர்வது என தெளிவாக முடிவு எடுத்து விட்டனர், அதில் மாற்றம் இல்லை என நம்புகிறேன் என கூறி உள்ளார்.

* ஈரானை சமாளிக்கிற வகையில், மத்திய கிழக்கு நாடுகளில் 14 ஆயிரம் படை வீரர்களை தாங்கள் கூடுதலாக அமர்த்தி உள்ளதாக அமெரிக்க ராணுவ மந்திரி மார்க் எஸ்பெர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா: கான்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் பலி, 15 பேர் காயம்
அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
2. அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. அமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசுகிறார்கள்
அமெரிக்காவில் 9 லட்சம் பேர் இந்தி மொழி பேசி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
5. அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்: 8 பேர் பலி
அமெரிக்காவை தாக்கிய புயல் காரணமாக 8 பேர் பலியாகினர்.