ஏமனில் பன்றி காய்ச்சலுக்கு 8 பேர் பலி


ஏமனில் பன்றி காய்ச்சலுக்கு 8 பேர் பலி
x
தினத்தந்தி 19 Dec 2019 1:50 AM GMT (Updated: 19 Dec 2019 1:50 AM GMT)

ஏமன் நாட்டின் வடக்கே பன்றி காய்ச்சலுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர்.

ஏடன்,

ஏமன் நாட்டில் கடந்த 2015ம் ஆண்டு அதிபராக பதவியேற்ற அப்திராபவ் மன்சூர் ஹாடி அரசுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தபொழுதும், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசை எதிர்த்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஏமனில் சுகாதார பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பில்லா நிலை மற்றும் உணவு பற்றாக்குறை ஆகியவை ஏற்பட்டு அதனால் வியாதிகள் பரவி வருகின்றன.

ஏமனின் வடக்கு பகுதியில் ஷியா ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  இங்கு பருவகால காய்ச்சல் பாதிப்பிற்கு 1,600 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  அவர்களில் 48 பேர் பலியாகி உள்ளனர்.

இவர்களில் 8 பேர் பன்றி காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என ஹவுதி சுகாதார மந்திரி தஹா தெரிவித்து உள்ளார்.  இதனை அடுத்து அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  பன்றி காய்ச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக அறைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன என்றும்  அவர் கூறியுள்ளார். 

Next Story