குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் தவழும் குழந்தைகளுக்கான போட்டி -வீடியோ


குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் தவழும் குழந்தைகளுக்கான போட்டி -வீடியோ
x
தினத்தந்தி 19 Dec 2019 8:00 AM GMT (Updated: 19 Dec 2019 8:00 AM GMT)

குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் தவழும் குழந்தைகளுக்கான போட்டி வீடியோ வைரலாகி உள்ளது.

 நியூ ஒர்லியன்ஸ்

அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸில் தண்டர் என்.பி.ஏ கூடைப்பந்து அணியின்  மைதானத்தில்  தவழும் குழந்தைகள் போட்டி நடைபெற்றது. அந்த குழந்தைகள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இந்த வீடியோ கூடைப்பந்து அணியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகள் ஒரு புறமிருந்து மறுபுறமிருக்கும் எல்லைக் கோடான இலக்கை வந்தடைய வேண்டும். தவழும் குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போடியில் குழந்தைகளை வரவைக்க  பெற்றோர்கள்  சிரமப்படுகிறார்கள்.

கலந்து கொண்ட குழந்தைகளில் மூன்று நடுவில் வந்து உடகார்ந்து கொள்கிறது. ஒரு குழந்தை எல்லை கோடுவரை சென்று விட்டு திரும்பி விடுகிறது. மழலை குழந்தைகளின் சேட்டையை பார்க்கும்போது சிரித்து சிரித்து கண்களில் கண்ணீரே வந்துவிடும்.

ரேஸில் கலந்து கொண்ட குழந்தைகள் சிலர் விட்ட இடத்திலேயே ஆட்டம் போட்டு கொண்டிருக்கின்றனர்.

பெற்றோர்கள் குழந்தையை தவழவைக்க நடத்தும் நிகழ்வுகளும் சுவாரஸ்யமாக உள்ளது. இறுதியாக ஒரு குழந்தை யாரும் எதிர்பார்க்காத நிலையில் இலக்கை வந்தடைந்து வெற்றி பெறுகிறது. ரேஸில் வெற்றி பெற்ற குழந்தைக்கு பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டது. இந்த வீடியோ பார்ப்பவர்களின் இதயத்தை கொள்ளை கொள்கிறது என்றே சொல்லலாம்.




Next Story