ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை சீனா அனுமதிக்காது - ஜின்பிங்


ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை சீனா அனுமதிக்காது - ஜின்பிங்
x
தினத்தந்தி 20 Dec 2019 10:36 PM GMT (Updated: 20 Dec 2019 10:36 PM GMT)

ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

* அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானுக்கு நேற்று சென்றார். அங்கு அவர் தலைநகர் டோக்கியோவில் அந்த நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபேவை சந்தித்து பேசினார். கடந்த 20 ஆண்டுகளில் ஜப்பானுக்கு சென்ற முதல் ஈரான் அதிபர் ஹசன் ருஹானி என்பது குறிப்பிடத்தக்கது.

* பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது 2 ராக்கெட் குண்டுகளை வீசி எறிந்தனர். எனினும் இதில் உயிரிழப்போ அல்லது யாரும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. இதற்கிடையே ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தியது.

* ஈரானில் இரட்டை குடியுரிமை பெற்ற மக்களின் சுதந்திரங்களை பறிக்கும் வகையில் அவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு, அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதித்ததாக குற்றம் சாட்டி அந்த நாட்டை சேர்ந்த நீதிபதிகள் 2 பேர் மீது அமெரிக்க நிதித்துறை பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

* ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

Next Story