உலக செய்திகள்

ரஷியாவில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி + "||" + Gunfire at Security Forces office in Russia; 2 killed

ரஷியாவில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி

ரஷியாவில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி
ரஷியாவில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.
மாஸ்கோ,

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அந்த நாட்டின் மத்திய பாதுகாப்பு படையின் தலைமையகம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த தலைமையகத்துக்கு வெளியே பாதுகாப்பு படை அதிகாரிகள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென பாதுகாப்பு படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அதிகாரி ஒருவரின் உடலில் குண்டு பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.


இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து, பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தாக்குதலில் ஈடுபட்ட நபருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே சமயம் இந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார்? தாக்குதலுக்கான பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் கொரோனா வைரசா? ரெயில் பயணிகளிடம் பீதியை கிளப்பிய வாலிபர்
ரஷியாவில் வாலிபர் ஒருவர் ரெயிலில் கொரோனா வைரசால் சுருண்டு விழுவது போல் நடித்து பயணிகளிடையே பீதியை கிளப்பினார்.
2. ரஷியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவு
ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் உள்ள மில்கோவோ நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. ரஷியாவில் வெந்நீர் குழாய் வெடித்து 5 பேர் பலி
ரஷியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வெந்நீர் குழாய் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. ரஷியாவில் எரிவாயு வயலில் தீ விபத்து - 2 பேர் பலி
ரஷியாவில் யாமல் தீபகற்ப பகுதியில் உள்ள எரிவாயு வயலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர்.
5. ரஷியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு
ரஷியாவில் பலானா நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.