வடகொரியா-அமெரிக்கா இடையேயான சமரச பேச்சு வார்த்தை நிறுத்தம்


வடகொரியா-அமெரிக்கா இடையேயான சமரச பேச்சு வார்த்தை நிறுத்தம்
x
தினத்தந்தி 21 Dec 2019 8:36 PM GMT (Updated: 21 Dec 2019 8:36 PM GMT)

வடகொரியா-அமெரிக்கா இடையேயான சமரச பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது.


* வடகொரியா-அமெரிக்கா இடையேயான சமரச பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தங்கள் நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக அமெரிக்கா கடுமையாக விமர்சித்து இருப்பதற்கு, வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா கடும் விலை கொடுக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

* * இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனர்கள் கிழக்கு காசா முனையில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 30 பாலஸ்தீனர்கள் படுகாயம் அடைந்தனர்.

* உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் 40 லட்சம் மக்கள் பயன் அடையத்தக்க விதத்தில் மனித நேய உதவிகளை ஓராண்டு காலம் நீட்டிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் சீனாவும், ரஷியாவும் தங்கள் மறுப்புரிமை ஓட்டு அதிகாரத்தை பயன்படுத்தி அதை தடுத்து விட்டனர். இது ஏமாற்றம் தருவதாக அமெரிக்காவும், பிரான்சும் கருத்து தெரிவித்துள்ளன.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் சீன அதிபர் ஜின்பிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தைவான், ஹாங்காங், திபெத் விவகாரங்களில் அமெரிக்காவின் கருத்துகளும், நடவடிக்கைகளும் இரு நாட்டு உறவுகளைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

* ரஷியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு உக்ரைன் வழியாக கியாஸ் எடுத்துச்செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாஸ்கோவுக்கும், உக்ரைனுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


Next Story