சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி


சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி
x
தினத்தந்தி 22 Dec 2019 10:28 PM GMT (Updated: 22 Dec 2019 10:28 PM GMT)

சீனாவின் சோங்ஷான் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.


* சீனாவின் குவாங்டாங் மாகாணம் சோங்ஷான் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்.

* அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* கவுதமலா நாட்டில் சகபா நகரில் 50-க்கு மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் மீது, லாரி பயங்கரமாக மோதியதில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

* அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்புக்கும் இடையே முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில், மிக விரைவில் முழுமையான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* ஈராக்கின் சாலஹுதின் மாகாணம் பாய்ஜி நகரில் போலீஸ் சோதனை சாவடி மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 5 போலீசார் பலியாகினர். அதே சமயம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஈரான் மற்றும் வடகொரியா விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்தனர்.


Next Story