இலங்கையில் நடந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
கொழும்பு,
இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள குருந்துகஹ ஹெதக்ம என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
வேனும் டிரக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மேற்கூறிய விபத்து நடைபெற்று உயிர்பலி ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலியான இந்தியர்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் என அந்நாட்டு பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார்.