கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 6.2 புள்ளிகளாக பதிவு


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நிலநடுக்கம்:  ரிக்டர் அளவு கோலில் 6.2 புள்ளிகளாக பதிவு
x
தினத்தந்தி 25 Dec 2019 9:47 PM GMT (Updated: 25 Dec 2019 9:47 PM GMT)

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது.


* ஆப்கானிஸ்தானில் ஈரானின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஹெரட் மாகாணத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சுங்க இலாகா அதிகாரிகளை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் சுங்க இலாகா அதிகாரிகள் 3 பேர் பலியாகினர்.

* ஏமனின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் சாடா மாகாணத்தில் உள்ள சந்தை பகுதியில் சவுதி அரேபிய ராணுவம் பீரங்கிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 17 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 12 பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

* கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நேற்று முன்தினம் 4 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 4 தடவை நிலநடுக்கம் தாக்கிய நிலையில், நேற்று அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள ஹார்டி துறைமுக நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* மத சுதந்திரங்களை மீறும் நாடுகளின் பட்டியலில் தங்கள் நாட்டை சேர்த்ததற்காக அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் ஒருதலைபட்சமான மற்றும் தன்னிச்சையான முடிவு என பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.

Next Story