பிரேசிலில் பரிதாபம்: உயிரோடு மண்ணுக்குள் புதைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி


பிரேசிலில் பரிதாபம்: உயிரோடு மண்ணுக்குள் புதைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
x
தினத்தந்தி 25 Dec 2019 10:14 PM GMT (Updated: 25 Dec 2019 10:14 PM GMT)

பிரேசிலில் உயிரோடு மண்ணுக்குள் புதைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக பலியாயினர்.

பிரேசிலியா,

பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள பெர்னம்புகோ மாகாணத்தின் தலைநகர் ரிசிபேவின் புறநகர் பகுதியான டோயிஸ் யுனிடோஸ் என்ற நகரில் நேற்று முன்தினம் இரவு திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீவிர மீட்பு பணியில் இறங்கினர். மேலும், இது பற்றி தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.

எனினும் இந்த கோர சம்பத்தில் ஒரு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவார்கள்.

அவர்களது உடல்கள் சுமார் 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டன. டோயிஸ் யுனிடோசில் உள்ள 2 ராட்த தண்ணீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதாகவும், அதன் காரணமாக மண்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story