உலக செய்திகள்

விலங்கியல் பூங்காவில் புலிக்கூண்டுக்குள் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் + "||" + Man attacked by tiger after 'falling' into animal's pit at zoo in Saudi Arabia

விலங்கியல் பூங்காவில் புலிக்கூண்டுக்குள் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

விலங்கியல் பூங்காவில் புலிக்கூண்டுக்குள் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
சவுதி அரேபியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலியால் தாக்கப்பட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ரியாத்,

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் புலிகள் வசிக்கும் கூண்டுக்குள் விழுந்து விட்டார். இதை கண்ட புலி ஒன்று அவரை கடிக்கத் தொடங்கியது.

இதனைக் கண்ட பூங்கா ஊழியர்கள் துப்பாக்கி மூலம் மயக்க மருந்தைச் செலுத்தி, புலி மயங்கிய பின் அவரை மீட்டனர். புலி தாக்கியதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரியாத் நகர போலீசார் நடத்திய விசாரணையில் அவர் சூடானைச் சேர்ந்த முகம்மத் அப்துல் மோஷன் என்பது தெரியவந்தது. அவர் எப்படி புலிக்கூண்டுக்குள் சென்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.தொடர்புடைய செய்திகள்

1. சவுதி அரேபியாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா? - மன்னர் தம்பி உள்பட அரச குடும்பத்தினர் 3 பேர் கைதால் பரபரப்பு
சவுதி அரேபியாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயற்சித்ததாக மன்னர் தம்பி உள்பட அரச குடும்பத்தினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2. அறிவியல் அதிசயம்: ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழ முடியும்?
பூமியில் ஆக்சிஜனின்றி உயிர்வாழும் புதிய உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
3. ஏமனில் இருந்து சவுதி அரேபியாவின் நகரங்களை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகள் தடுத்து நிறுத்தம்
ஏமனில் இருந்து தனது நகரங்களை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகளை சவூதி அரேபியா தடுத்து நிறுத்தியது.
4. மூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்
இசை திறன்கள் பாதிக்கப்படாமல் இருக்க மூளை அறுவை சிகிச்சை செய்யும்போது வயலின் வாசித்த பெண்.
5. சீனா நகரங்களில் இருந்து வருபவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை
கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனா நகரங்களில் இருந்து சவுதி அரேபியாவுக்குள் நுழைய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.