உலக செய்திகள்

ரஷியாவில் எரிவாயு வயலில் தீ விபத்து - 2 பேர் பலி + "||" + Fire in a gas field in Russia - 2 people killed

ரஷியாவில் எரிவாயு வயலில் தீ விபத்து - 2 பேர் பலி

ரஷியாவில் எரிவாயு வயலில் தீ விபத்து - 2 பேர் பலி
ரஷியாவில் யாமல் தீபகற்ப பகுதியில் உள்ள எரிவாயு வயலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர்.
* காங்கோ நாட்டில் பயணிகளையும், பொருட்களையும் ஏற்றிக்கொண்டு ஆற்றில் சென்று கொண்டிருந்த படகில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். இந்த கோர விபத்து, கசாய் மாகாணத்தில் நடந்துள்ளது.


* பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப், தேச துரோக வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து லாகூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் குளிர்கால விடுமுறை காலமாக முழு அமர்வுக்கு நீதிபதிகள் இல்லை என்ற காரணம் கூறி இந்த மனு திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

* சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக சர்வதேச சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 79 ஓட்டுகளும், எதிராக 60 ஓட்டுகளும் விழுந்தன.

* ரஷியாவில் யாமல் தீபகற்ப பகுதியில் உள்ள எரிவாயு வயலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர்.

* சிலி நாட்டில் புதிய அரசியல் சாசன சட்டம் இயற்றுவது தொடர்பாக மக்களின் கருத்தை அறிவதற்காக வரும் ஏப்ரல் மாதம் 26-ந்தேதி பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிபர் செபாஸ்டியன் பினேரா அறிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் கொரோனா வைரசா? ரெயில் பயணிகளிடம் பீதியை கிளப்பிய வாலிபர்
ரஷியாவில் வாலிபர் ஒருவர் ரெயிலில் கொரோனா வைரசால் சுருண்டு விழுவது போல் நடித்து பயணிகளிடையே பீதியை கிளப்பினார்.
2. ரஷியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவு
ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் உள்ள மில்கோவோ நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. ரஷியாவில் வெந்நீர் குழாய் வெடித்து 5 பேர் பலி
ரஷியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வெந்நீர் குழாய் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. ரஷியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு
ரஷியாவில் பலானா நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.
5. ரஷியாவில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
ரஷியாவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.