உலக செய்திகள்

சூடானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது : நீதிபதிகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு + "||" + Military plane crash in Sudan: 18 people, including judges, die

சூடானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது : நீதிபதிகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு

சூடானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியது : நீதிபதிகள் உள்பட 18 பேர் உயிரிழப்பு
சூடானில் ராணுவ விமானம் விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த சிறுவர்கள், நீதிபதிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
கார்டூம், 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானின் டார்பர் பிராந்தியத்தில் உள்ள மேற்கு டார்பர் மாகாணத்தில் ஆப்பிரிக்க மற்றும் அரபு பழங்குடியின மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இந்த இரு குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் மேற்கு டார்பர் மாகாணத்தின் தலைநகர் அல் ஜெனீனாவில் ஆப்பிரிக்க மற்றும் அரபு பழங்குடியின மக்களுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு பயங்கர மோதல் வெடித்தது.

இந்த மோதலில் 48 பேர் பலியாகினர். சுமார் 250 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அல் ஜெனீனாவில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பிரதமர் அப்துல்லா ஹம்தோக், ராணுவ தளபதி முகமது ஹமதான் தாகலோ மற்றும் மூத்த அதிகாரிகள் அங்கு முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வன்முறையில் காயம் அடைந்த 3 நீதிபதிகள் மற்றும் 4 சிறுவர்கள் உள்பட 11 பேரை ஏற்றிக்கொண்டு ராணுவ விமானம் ஒன்று நேற்று காலை அல் ஜெனீனாவில் இருந்து புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி உள்பட விமான ஊழியர்கள் 7 பேரும் இருந்தனர்.

புறப்பட்டு சென்ற 5 நிமிடத்தில் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் விமானத்தில் பயணம் செய்த 18 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெய்வேலி என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2. குஜராத் ரசாயன ஆலையில் விபத்து: பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் பலி
குஜராத் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர்.
3. கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது விபத்து: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயம்
கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
4. மின்சார கம்பத்தில் டிராக்டர் மோதி விவசாய தொழிலாளர்கள் 11 பேர் பலி
ஆந்திராவில் மின்சார கம்பத்தில் டிராக்டர் மோதி விவசாய தொழிலாளர்கள் 11 பேர் பலியானார்கள்.
5. என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: பலியான ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை
என்.எல்.சி.யில் கொதி கலன் வெடித்த விபத்தில் பலியான ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது.