உலக செய்திகள்

கென்யாவில் பயங்கரவாதிகள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு; 3 பயணிகள் பலி + "||" + Terrorists gunned on bus in Kenya 3 passengers killed

கென்யாவில் பயங்கரவாதிகள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு; 3 பயணிகள் பலி

கென்யாவில் பயங்கரவாதிகள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு; 3 பயணிகள் பலி
கென்யாவில் பயங்கரவாதிகள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பயணிகள் பலியாகினர்.
நைரோபி, 

சோமாலியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் அல் சபாப் பயங்கரவாதிகள் அண்டை நாடான கென்யாவிலும் தற்போது காலூன்றி பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான மொம்பாசா நகரில் இருந்து லாமு நகருக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 50 பயணிகள் இருந்தனர்.

அங்கு ஒரு சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். துப்பாக்கிச்சூட்டில் 5 பயணி களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன.

அவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மற்ற 2 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அல் சபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு ; 8 பேர் பலி
ஜெர்மனியில் இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.
2. ஆப்பிரிக்க நாட்டில் கொடூரம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 24 பேர் பலி
ஆப்ரிக்காவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 பேர் பலியாகினர்.
3. கென்யாவில் பரிதாபம்: பள்ளிக்கூடத்தில் கூட்ட நெரிசல் - 13 மாணவர்கள் பலி
கென்யாவில் பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலியாகினர்.
4. கென்யாவின் முன்னாள் அதிபர் டேனியல் அரப் மோய் உடல்நலக்குறைவால் காலமானார்
கென்யாவின் முன்னாள் அதிபர் டேனியல் அரப் மோய் உடல்நலக்குறைவால் காலமானார்.
5. காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் அவந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.