உலக செய்திகள்

நிர்வாண புகைப்படங்களை அனுப்பி, ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்பு பணிக்கு ரூ.5 கோடி வசூல் செய்த மாடல் அழகி + "||" + Instagram model raises $700,000 for Australia fires with nude photos before account deleted

நிர்வாண புகைப்படங்களை அனுப்பி, ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்பு பணிக்கு ரூ.5 கோடி வசூல் செய்த மாடல் அழகி

நிர்வாண புகைப்படங்களை அனுப்பி, ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்பு பணிக்கு ரூ.5 கோடி வசூல் செய்த மாடல் அழகி
நிர்வாண புகைப்படங்களை அனுப்பி ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்காக 7 லட்சம் டாலர்களை இன்ஸ்டா மாடல் ஒருவர் வசூல் செய்துள்ளார்.
வாஷிங்டன்,

கைலன் வார்ட் (20) என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டா மாடல்  பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அதிகம். இவர் கடந்த 4-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதில், என்னுடைய நிர்வாண புகைப்படங்களை தனிப்பட்ட நபர்களுக்கு அனுப்புகிறேன். அதற்காக அவர்கள் 10 டாலர் அனுப்ப வேண்டும். இந்த தொகை ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். அவருக்கு இரண்டே நாட்களில் 7 லட்சம் டாலர் வசூல் ஆகியுள்ளது. இந்திய மதிப்பில் இது. ரூ.5 கோடி ஆகும்.

இது குறித்து மீண்டும் பதிவிட்ட அவர், இது உண்மைதானா? என் ட்வீட்டின் எதிரொலியாக ஆஸ்திரேலியா காட்டுத் தீ மீட்புப் பணிக்கு 7 லட்சம் டாலர் வசூல் ஆகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில் வசூல் செய்த பணத்தை கைலன் காட்டுத்தீ மீட்புப்பணிக்கு பயன்படுத்தாமல் ஏமாற்றுவதாக புகார்களும் எழுந்தன.

அதற்கு பதிலளித்த அவர், கரீபியனில் விடுமுறைக்கு வந்தபோது, ஆஸ்திரேலியாவின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரையோரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட தீ பற்றி தெரிந்து வேதனை அடைந்தேன். என் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. நான் வசூல் செய்த பணத்தை எனக்காக பயன்படுத்தவில்லை. 

வேண்டுமென்றால் பணம் அனுப்புபவர்கள் ஆஸ்திரேலியா காட்டுத்தீ மீட்பு நிவாரண நிதிக்கு நேரடியாகவே அனுப்பலாம். அதற்கான ஆதாரத்தை மட்டும் எனக்கு அனுப்புங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கைலன் வார்டின் இன்ஸ்டா பக்கத்தை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. புதிய முயற்சி மூலம் காட்டுத் தீ மீட்புப் பணிக்கு பணம் வசூல் செய்யும் கைலன் வார்ட்டுக்கு சிலர் பாராட்டுகளையும், சிலர் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாய் முகத்துடன் உள்ள வவ்வால்
நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2. இங்கிலாந்தின் பூங்கா ஒன்றில் தாக்குதல் நடத்திய வாலிபர் குறித்த பகீர் பின்னணி
இங்கிலாந்து நாட்டில் பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதி நடத்திய கத்திகுத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
3. வட கொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது -வீடியோ வெளியீடு
வட கொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
4. வடகொரிய தலைவர் கிம்மின் உணவு முறையே அவரது தற்போதைய நிலைக்கு காரணம்
வடகொரிய தலைவர் கிம்மின் மலைக்க வைக்கும் உணவு முறையே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என முன்னாள் சமையல்காரர் கூறி உள்ளார்
5. கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? சீன மருத்துவர்கள் வெளியிட்ட புதிய தகவல்
கொரோனா வைரஸ் ஒருவரின் உடலில் எத்தனை நாட்கள் இருக்கும்? என்ற புதிய தகவலை சீன மருத்துவர்கள் வெளியிட்டு உள்ளனர்.