உலக செய்திகள்

தண்ணீரை அதிகம் குடிப்பதாக கூறி 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு + "||" + Up to 10,000 thirsty camels will be shot and killed during major Australian drought

தண்ணீரை அதிகம் குடிப்பதாக கூறி 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு

தண்ணீரை அதிகம் குடிப்பதாக கூறி 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு
தண்ணீரை அதிகம் குடிப்பதாக கூறி 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.
மெல்போர்ன்,

தண்ணீரை அதிகம் குடிப்பதாகக் கூறி சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து நாட்களில் ஒட்டகங்களை கொல்வதற்கு சிறப்புக் குழுவையும் ஆஸ்திரேலியா அமைத்துள்ளது. ஹெலிகாப்டரில் பறந்த படி ஒட்டகங்களை சுட்டுக்கொல்லும் பணியை இந்தக்குழு மேற்கொள்ளும்.

தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல்வகை ஒட்டகங்கள், மிக அதிகளவில் தண்ணீர் குடித்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அவற்றை சுட்டுக்கொல்லும் முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து தண்ணீரை ஒட்டகங்கள் குடித்து விடுவதாகவும் புகார் உள்ளது. இதன் காரணமாக அவற்றை கொல்ல அப்பகுதி மக்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த ஒட்டகங்களின் கழிவுகள் ஒரு டன் கார்பன்டை ஆக்சைடுக்கு நிகரான, மீத்தேன் வாயுவை உருவாக்குவதாக கூறப்படுகிறது. இது புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை, மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் ரக்பி வீரர் தனது 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார்.
2. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது - கங்குலி தகவல்
இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட இருப்பதாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
3. ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பறிமுதல்: மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை
ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பொருட்களை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவு பேய் மழை
ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் மழை பெய்து வருகிறது.
5. ஆஸ்திரேலியாவில் பரிதாபம்: கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி
ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிறுவர், சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.