ஈராக்கில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீதான தாக்குதல்கள் தற்காப்புக்காக நடத்தப்பட்டது -ஈரான்


ஈராக்கில் உள்ள அமெரிக்க  இலக்குகள் மீதான தாக்குதல்கள் தற்காப்புக்காக நடத்தப்பட்டது -ஈரான்
x
தினத்தந்தி 8 Jan 2020 9:52 AM GMT (Updated: 8 Jan 2020 9:52 AM GMT)

ஈராக்கில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீதான ஏவுகணை தாக்குதல்கள் தற்காப்புக்காக நடத்தப்பட்டது என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

தெஹ்ரான்

சில தினங்களுக்கு முன் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை ஈரான் நாட்டு படைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

ஏவுகணைத் தாக்குதலில்  ஈரானின் அய்ன் அல்-ஆசாத் விமான தளம்  எர்பில் தளமும் சேதம் அடைந்து உள்ளன.

ஈராக்கில்  அமெரிக்க இலக்குகள் ஈரானால்  ஏவப்பட்ட 15 ஏவுகணைகள் தாக்குதல்களில் குறைந்தது 80 "அமெரிக்க பயங்கரவாதிகள்" கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி கூறி உள்ளது.

இந்த தாக்குதலில் ஃபத்தே -110 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு  உள்ளது. அவை 186 மைல் அல்லது 300 கி.மீ. சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இந்த தாக்குதலுக்கு  'தியாகி சுலைமானி ' என்று பெயரிடப்பட்டு உள்ளது என அரசு தொலைக்காட்சி  கூறி உள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க  இலக்குகள் மீதான ஏவுகணை தாக்குதல்கள் "முறையான தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்று ஈரான் வெளியுறவு மந்திரி கூறி உள்ளார்.

ஈரானிய வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஜரீஃப் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 

ஈராக்கில் உள்ள அமெரிக்க  இலக்குகள் மீதான ஏவுகணை தாக்குதல்கள் "நியாயமான முறையான தற்காப்புக்காக நடத்தப்பட்டது. அமெரிக்கா  மாயைகளின் அடிப்படையில் அதை மதிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நாங்கள்  போரை விரும்பவில்லை ஆனால் அமெரிக்கா பதிலடி கொடுத்தால்  நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்வதற்காக தாக்குவோம் என கூறி உள்ளார்.

Next Story