ஆப்கானிஸ்தானில் தலீபான் தளபதிகள் 5 பேர் சுட்டுக்கொலை


ஆப்கானிஸ்தானில் தலீபான் தளபதிகள் 5 பேர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 9 Jan 2020 8:14 PM GMT (Updated: 9 Jan 2020 8:14 PM GMT)

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், மற்றொரு புறம் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

காபூல், 

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், மற்றொரு புறம் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அதே சமயம் ஆப்கானிஸ்தான் ராணுவமும் தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க தீவிரமாக போராடி வருகிறது.

தலீபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் அமெரிக்க படைகளின் உதவியுடன் தரை வழியாகவும், வான்வழியாகவும் ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள லக்மன் மாகாணத்தின் அலிங்கர் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதிகள் பலர் ஒரே இடத்தில் கூடியிருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு விரைந்த ராணுவத்தினர் தலீபான் தளபதிகள் இருந்த கட்டிடத்தை சுற்றிவளைத்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தலீபான் தளபதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் அவர்களுடன் இருந்த 15 பயங்கரவாதிகளும் பலியாகினர். அதனை தொடர்ந்து, துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

Next Story