உலக செய்திகள்

நைஜர் நாட்டில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 25 வீரர்கள் பலி + "||" + Attack on army camp in Niger 25 soldiers killed

நைஜர் நாட்டில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 25 வீரர்கள் பலி

நைஜர் நாட்டில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 25 வீரர்கள் பலி
நைஜர் நாட்டில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 25 வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடியாக 63 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
நியாமி,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் போகோஹரம் பயங்கரவாதிகள் தற்போது அண்டை நாடான நைஜரில் காலூன்றி பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவர்கள் நைஜரில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் மாலியின் எல்லையையொட்டி அமைந்துள்ள சினாகோட்ரர் நகரில் இருக்கும் ராணுவ முகாம் மீது நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

ராணுவ முகாமை சுற்றிவளைத்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 25 ராணுவ வீரர்கள் பலியாகினர். அதே சமயம் ராணுவவீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 63 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் போகோஹரம் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சிரியா ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
சிரியா ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
2. நெல்லை தச்சநல்லூரில் பரபரப்பு: வாலிபரை தாக்கிய 8 பேர் கைது தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் திடீர் உண்ணாவிரதம்
நெல்லையில் வாலிபரை தாக்கியதாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கத்தினர் திடீரென உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. மெஞ்ஞானபுரம் அருகே வக்கீலை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது வழக்கு
வக்கீல் தாக்கப்பட்டது தொடர்பாக, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது கோர்ட்டு உத்தரவின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
4. இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் கத்திக்குத்து; 3 பேர் பலி-வாலிபர் கைது
இங்கிலாந்தில் உள்ள ஒரு பூங்காவில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. இந்திய வீரர்கள் மீது தாக்குதல்: சீன பொருட்களை புறக்கணிக்க மத்திய மந்திரிகள் அழைப்பு
இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, சீன பொருட்களை புறக்கணிக்க மத்திய மந்திரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.