உலக செய்திகள்

நியூசிலாந்தின் ரவுல் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு + "||" + Powerful earthquake in New Zealand's Raul Island - Record as 5.4 points on the Richter Scale

நியூசிலாந்தின் ரவுல் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு

நியூசிலாந்தின் ரவுல் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு
நியூசிலாந்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரவுல் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

* வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான அணுஆயுத பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின. இது இருநாட்டு தலைவர்களின் நட்புணர்வை பிரதிபலிப்பதாகவும், அதே சமயம் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு திரும்புவோம் எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.


* ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொன்ற அதே நாளில் ஏமனில் உள்ள ஈரானின் மற்றொரு படை தளபதியான அப்துல் ராசாவை அமெரிக்க படைகள் குறிவைத்ததாகவும், ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்ததாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்காவுடனான பிரச்சினை காரணமாக 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ஈரான் அண்மையில் அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐரோப்பிய கூட்டமைப்பு ஈரான் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

* நியூசிலாந்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரவுல் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ஈராக்கின் தெற்கு பகுதியில் உள்ள பாஸ்ரா நகரில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இது பற்றி செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்த தனியார் செய்தி சேனலின் நிருபர் மற்றும் ஒளிப்பதிவாளரை மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
2. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி அபாரம்
நியூசிலாந்துக்கு எதிரான ஆக்கி போட்டியில், இந்திய பெண்கள் அணி அபார வெற்றிபெற்றது.
4. நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணி வெற்றியை தொடருமா?
இந்தியா-நியூசிலாந்து மோதும் 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது. இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
5. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இமாலய இலக்கை விரட்டிப்பிடித்து இந்தியா வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 204 ரன்கள் இலக்கை இந்திய அணி 19-வது ஓவரிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது.