ஜப்பான் நாட்டின் ராணுவ மந்திரி அமெரிக்காவுக்கு 5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம்


ஜப்பான் நாட்டின் ராணுவ மந்திரி அமெரிக்காவுக்கு 5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 12 Jan 2020 10:47 PM GMT (Updated: 12 Jan 2020 10:47 PM GMT)

ஜப்பான் நாட்டின் ராணுவ மந்திரி டாரோ கோனோ. அமெரிக்க நாட்டில் 5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.


* அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் சவுதி அரேபிய ராணுவ அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம், அந்த நாட்டையே உலுக்கியது. இதையடுத்து, அங்கு பயிற்சி பெற்று வந்த சவுதி அரேபிய ராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

* ஜப்பான் நாட்டின் ராணுவ மந்திரி டாரோ கோனோ. அமெரிக்க நாட்டில் 5 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

* பியுர்டோரிகா நாட்டில் கடந்த வாரம் தொடர்ந்து நடைபெற்ற நில நடுக்கங்களில் 110 மில்லியன் டாலர் (சுமார் ரூ.770 கோடி) மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில், ‘சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக எதிரான ஓட்ட பந்தயம்’ என்ற பெயரில் ஒரு ஓட்ட பந்தயம் நடைபெற்றது. இதில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

* மால்டா நாட்டின் பிரதமராக இருந்த ஜோசப் மஸ்கட் கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக தொழிற்கட்சியின் தலைவர் ராபர்ட் அபேலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* பிரான்சில் ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக நேற்று முன்தினம் நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 1 லட்சத்து 49 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாகவும், பாரீஸ் நகரில் 21 ஆயிரம் பேர் பங்கேற்றதாகவும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் கூறுகிறது.


Next Story