உலக செய்திகள்

அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு + "||" + Iraq's Sadr calls for anti-US protests amid new rocket attack

அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு

அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு
மீண்டும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார்.
பாக்தாத்|

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 3 ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது. இந்த தாக்குதலைதொடந்ர்து அமெரிக்க ராணுவத்தை வெளியேறுமாறு  ஈராக் பாராளுமன்றம் கேட்டு கொண்டு உள்ளது.

ஈராக் பாராளுமன்றம் ஜனவரி 5-ம் தேதி  வாக்களிப்பு மூலம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது.  2014 முதல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு  எதிராக போரிட அமெரிக்கா அங்கு முகாமிட்டது. அங்கு சுமார் 5200 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர்.

அமெரிக்கப் படைகளின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், நேற்று இரவு கத்யுஷா ராக்கெட்டுகள் பாக்தாத்திற்கு வடக்கே ஈராக்கிய விமானத் தளத்தை குறிவைத்து தாக்கின.  அங்கு அமெரிக்கத் தலைமையிலான கூட்டணிப் படைகள் முகாமிட்டு உள்ளன. 

இந்த நிலையில்  அமெரிக்க ராணுவத்தை வெளியேற  வலியுறுத்தி ஈராக் தலைவர் மொக்தாதா சதர்  அமெரிக்க ராணுவத்திற்கு  எதிராக மிகப்பெரிய போராட்ட பேரணி நடத்த மக்களுக்கு  அழைப்பு விடுத்து உள்ளார். ஈராக்கின் வானம், நிலம் மற்றும் இறையாண்மை ஆகியவை ஒவ்வொரு நாளும் படைகளை ஆக்கிரமிப்பின் மூலம் மீறப்படுகின்றன என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா - ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது-அமெரிக்க புலனாய்வுத்துறை
அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது என அமெரிக்க புலனாய்வுத்துறை கூறி உள்ளது.
2. சீன செயலிகளுக்கு காலக்கெடு விதித்த டொனால்டு டிரம்ப், தடை செய்ய இந்தியாவை மேற்கோள் காட்டினார்
சீன செயலிகளுக்கு காலக்கெடு விதித்த டொனால்டு டிரம்ப் ‘தேசிய பாதுகாப்பு ஆபத்து’ சீன டிக் டாக்கை தடை செய்ய இந்தியாவை மேற்கோள் காட்டினார்.
3. விண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின்னர் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள் !
அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலமுடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.77 கோடியாக உயர்ந்துள்ளது.
5. ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள் சுட்டுக்கொலை: ஐ.எஸ். பயங்கரவாதிகள் அட்டுழியம்
ஈராக்கில் 2 ராணுவ அதிகாரிகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.