உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் திடீர் மழை ; காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது + "||" + Heavy rains in Australia; The impact of wildfire is reduced

ஆஸ்திரேலியாவில் திடீர் மழை ; காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது

ஆஸ்திரேலியாவில் திடீர் மழை ; காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது
ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது.

சிட்னி,

காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். ஏறத்தாழ 100 கோடி விலங்குகள் பலியாகி இருக்கின்றன. 2 ஆயிரம் வீடுகள் எரிந்து தரை மட்டமாகின. 1 கோடி ஹெக்டேர் நிலப்பரப்பு சேதம் அடைந்தது. வெப்பத்தின் அளவும் அந்தப் பகுதிகளில் அதிகரித்து வந்தது. காற்று மாசும் பெருகியது.

இந்த நிலையில் காட்டுத்தீ பரவிய பகுதிகளில் நேற்று முன்தினம் திடீரென மழை பெய்தது. அந்த மழை நேற்றும் தொடர்ந்தது. இதனால் காட்டுத்தீயின் தாக்கம் குறைந்துள்ளது. இந்த திடீர் மழை, தீயணைப்பு வீரர்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.

சூறாவளி காற்று, வெப்ப காற்றின் தரத்தை மாற்றி உள்ளது என விக்டோரியா சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை கூறியது. இந்த வார இறுதியில் மேலும் மழையை எதிர்பார்ப்பதாக அந்த முகமை தெரிவித்தது.

நியூசவுத் வேல்ஸ் தீயணைப்பு படை இந்த திடீர் மழை பற்றி கருத்து கூறுகையில், ‘‘இது எங்கள் கிறிஸ்துமஸ், பிறந்த நாள், திருமண விழா கொண்டாட்டங்களுக்கு வழி வகுத்துள்ளது’’ என தெரிவித்தது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்டா பகுதியில் கொட்டிய மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன - விவசாயிகள் கவலை
டெல்டா பகுதியில் கொட்டிய மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
2. நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை: நிரம்பி வரும் அணைகள்; விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைகள் நிரம்பி வருகின்றன. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
4. கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. சென்னையில் காலையில் சில இடங்களில் லேசான மழை
சென்னையில் இன்று காலை சில இடங்களில் லேசான அளவில் மழை பெய்துள்ளது.