உலக செய்திகள்

செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் + "||" + selfie lust 40 stitches on face for young woman

செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்

செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
வளர்ப்பு நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணை அந்த நாய் கடித்ததில் அவர் படுகாயமடைந்து முகத்தில் 40 தையல் போடப்பட்டது.
புவெனஸ் அயர்ஸ்

சில இளம் பெண்கள்  வளர்ப்பு பிராணிகளை வைத்து அதனுடன் செல்பி எடுத்து இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் அப்டேட் செய்வார்கள். செல்ல பிராணிகளுடன் செல்பி எடுக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அர்ஜென்டினாவில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

லாரா சன்சோன் என்ற 17 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாய் அவரது முகத்தில் ஆழமாக கடித்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் உள் தையல், வெளி தையல் என 40 தையல் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக லாரா சன்சோன் அளித்துள்ள பேட்டியில், எதற்காக நாய் இவ்விதம் செய்தது என எனக்கு தெரியவில்லை. நான் நாயின் இடுப்பை தொட்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் பயத்தில் இவ்விதம் செய்ததா? இல்லை வயது முதிர்வு காரணமாக இவ்விதம் நடந்து கொண்டதா? எனக்கு  தெரியவில்லை என தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

1. சிலி நாட்டில் போராட்டம்; அர்ஜென்டினா மக்கள் ஆதரவு
சிலி நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அர்ஜென்டினாவில் மக்கள் பேரணி நடத்தினர்.