உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - அயதுல்லா அலி காமேனி + "||" + Careful Says Trump After Iran Supreme Leader Calls US Allies lackeys

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - அயதுல்லா அலி காமேனி

ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - அயதுல்லா அலி காமேனி
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் அவை ஈரான் சரணடைய காத்திருக்கின்றன என ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கூறி உள்ளார்.
தெஹ்ரான்: 

பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அரசாங்கங்கள் அமெரிக்காவின் எடுபிடிகள் என ஈரானின் உச்ச  தலைவர் அயதுல்லா அலி  காமேனி  குற்றம் சாட்டி  உள்ளார்.

ஈரான் மற்றும் பிரான்ஸ், இங்கிலாந்து , ஜெர்மனி, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா இடையே வியன்னாவில் 2015 அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் வரம்புகளை மீறுவது குறித்து இங்கிலாந்து , பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஈரானுக்கு சவால் விடுத்து இருந்தன.
 
அணுசக்தி ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் தொடர்ந்து ஆதரித்தால் ஐரோப்பிய கார்களை இறக்குமதி செய்வதற்கு 25 சதவீத கட்டணத்தை விதிப்பதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளதாக ஜெர்மன் பாதுகாப்பு மந்திரி அன்னெக்ரெட் கிராம்ப்-கரன்பவுர் தெரிவித்துள்ளார்.

இந்த  நிலையில் தெஹ்ரானில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது உரையாற்றிய   ஈரானின் உச்ச  தலைவர் அயதுல்லா அலி  காமேனி   இங்கிலாந்து , பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் பொல்லாத"அரசுகல்  "அணுசக்தி பிரச்சினையை (ஐ.நா) பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லுமாறு ஈரானை அச்சுறுத்தியதாக காமேனி குற்றம் சாட்டினார்.

ஐரோப்பிய அரசுகள் ஈரானுக்கு எதிரான வரலாற்று விரோதத்தை காட்டி வருகின்றன.(ஈரான்-ஈராக் போரின் போது) சதாம் உசேனுக்கு தங்களால் இயன்ற அளவு உதவியது இந்த மூன்று நாடுகள்தான்.

அவர்கள் அமெரிக்காவின் எடுபிடிகள்  என்பது அவர்களின் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க அரசியல் தலைவர்கள் 11 பேர் மீது சீனா பொருளாதார தடை
உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. இரு நாடுகளின் உறவும் மிகவும் மோசமடைந்துள்ளது.
2. வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து உடனடியாக வெளியேறிய டிரம்ப்
வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த மர்ம நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
3. அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா - ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது-அமெரிக்க புலனாய்வுத்துறை
அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறது என அமெரிக்க புலனாய்வுத்துறை கூறி உள்ளது.
4. நாளுக்குநாள் பலூன் போல் ஊதிக்கொண்டே செல்லும் பெண்ணின் வயிறு வெடித்துவிடுமோ என அச்சம்
சீனாவில் பெண் ஒருவரின் வயிறு பலூன் போல் நாளுக்குநாள் வீங்கிக்கொண்டே செல்லும் நிலையில், அதன் காரணம் அறியாமல் மருத்துவர்களே திகைத்துப்போயுள்ளார்கள்.
5. சீன செயலிகளுக்கு காலக்கெடு விதித்த டொனால்டு டிரம்ப், தடை செய்ய இந்தியாவை மேற்கோள் காட்டினார்
சீன செயலிகளுக்கு காலக்கெடு விதித்த டொனால்டு டிரம்ப் ‘தேசிய பாதுகாப்பு ஆபத்து’ சீன டிக் டாக்கை தடை செய்ய இந்தியாவை மேற்கோள் காட்டினார்.