உலக செய்திகள்

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை + "||" + Four members of the same family shot dead in the US

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள கிராண்ட்ஸ்வில்லே நகரத்தில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள ஒரு வீட்டில் 4 பேர் குண்டு காயங்களுடன் பிணமாக கிடந்தனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த குடும்பத்தினர் பற்றிய தகவலை போலீசார் வெளியிடவில்லை.


இந்த கொடூர செயலில் ஈடுபட்டவரும் அந்த குடும்பத்துக்கு மிகவும் நெருங்கிய உறவுமுறை உடையவர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய நபரை கைது செய்துவிட்டதாகவும், இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன் மரணம்
அமெரிக்காவை சேர்ந்த பெண் கணித மேதை கேத்தரின் ஜான்சன். மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த இவர், வயோதிகம் காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101.
2. அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து சாவு
அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து உயிரிழந்தார்.
3. அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
4. அமெரிக்காவின் நிகழ்ந்த பஸ் விபத்தில் 3 பேர் பலி - 18 பேர் படுகாயம்
அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் நிகழ்ந்த பஸ் விபத்தில், 3 பேர் பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொல்லப்பட்டார்.