உலக செய்திகள்

மரண தண்டனைக்கு ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஆதரவு + "||" + Eighty percent of Japanese support for the death penalty

மரண தண்டனைக்கு ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஆதரவு

மரண தண்டனைக்கு ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஆதரவு
மரண தண்டனைக்கு ஜப்பானில் 80 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ,

உலகம் முழுவதும் கடும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் மரண தண்டனைக்கு எதிராக குரல் எழுந்தது. இதையடுத்து மரண தண்டனை தொடர்பாக மக்களிடம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது.


அதில், 80 சதவீத மக்கள் மரண தண்டனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜப்பான் அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, 9 சதவீத மக்கள் மட்டுமே மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். 80.8 சதவீத மக்கள் அதை தொடர வேண்டும் என்றே கூறியுள்ளனர்.

மரண தண்டனையை ஆதரிக்கும் 57 சதவீதத்தினர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உணர்ச்சிகளைக் குணப்படுத்த வேண்டியது அவசியம். அதற்காக மரண தண்டனை விதிக்கப்படுவது சரியே என்று பதிலளித்துள்ளனர். 54 சதவீதத்தினர் மரண தண்டனையை சில வகையான குற்றங்களுக்கு பதிலடி என்று கூறியுள்ளனர்.

மேலும் பதிலளித்தவர்களில் 58 சதவீதத்துக்கும் அதிகமானோர் மரண தண்டனையை ஒழிப்பதால், கடுமையான குற்றங்கள் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ் பீதி: ஜப்பானில் பள்ளிக்கூடங்கள் மூடல்
கொரோனா வைரஸ் பீதியால் ஜப்பானில் பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன. இதற்கான அழைப்பை அந்த நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே விடுத்துள்ளார்.
2. தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதிப்பு
தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. சென்னை விமான நிலையத்தில் ஜப்பான், தென் கொரிய பயணிகளுக்கு தடை
சென்னை விமான நிலையத்தில் ஜப்பான், தென் கொரிய பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குடியுரிமைத்துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
4. கொரோனா வைரஸ் பீதி: ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட சொகுசு கப்பல்; 3,700 பேர் நடுக்கடலில் தவிப்பு
ஜப்பானில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக 3,700 பேருடன் வந்த சொகுசு கப்பல் நடுக்கடலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
5. அமெரிக்காவை தொடர்ந்து விண்வெளி பாதுகாப்பு படை அமைக்கும் ஜப்பான்
அமெரிக்காவைப் போன்று ஜப்பானும் விண்வெளி பாதுகாப்புப் படையை உருவாக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.