நைஜீரியாவில் பயங்கரம்: கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; 14 பேர் சாவு


நைஜீரியாவில் பயங்கரம்: கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; 14 பேர் சாவு
x
தினத்தந்தி 18 Jan 2020 10:47 PM GMT (Updated: 18 Jan 2020 10:47 PM GMT)

நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிக்கி 14 பேர் பலியாயினர்.

அபுஜா,

நைஜீரிய நாட்டின் ஜம்பாரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் ஆயுதம் ஏந்திய கும்பல் புகுந்தது. சுமார் 40 மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் கிராமத்தில் இருந்த வீடுகளுக்குள் நுழைந்து அங்கிருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர்.

மேலும் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்று கூறியவாறு, மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். உயிருக்கு பயந்து பலர் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். ஆனால் அந்த கும்பல் அவர்களை விடாமல் துரத்தி கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நைஜீரியாவில் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இதுபோன்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்துவது அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story