உலக செய்திகள்

ட்ரெண்டாகும் இந்த வருடத்திற்கான முதல் சேலஞ்ச்... தானிய சேலஞ்ச் + "||" + Cereal Challenge Goes Viral on TikTok With Teens Eating the Breakfast Food From Each Other’s Mouth

ட்ரெண்டாகும் இந்த வருடத்திற்கான முதல் சேலஞ்ச்... தானிய சேலஞ்ச்

ட்ரெண்டாகும் இந்த வருடத்திற்கான முதல் சேலஞ்ச்... தானிய சேலஞ்ச்
சமூக வலைதளங்களில் ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி அதனை பலரும் செய்து வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்றாகி விட்டது.
சென்னை

சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிகி சேலஞ்சு, கரப்பான்பூச்சி சேலஞ்சு, ஐஸ் சேலஞ்ச் , மோமோ சேலஞ்ச், ப்ளூ வேல் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச்,டென் இயர்ஸ் போட்டோ சேலஞ்ச், வீடியோ கால் சேலஞ்ச் போன்றவைகள் வைரலாகின. பலரும் அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.  அந்த வகையில், தற்போது 'தானிய  சேலஞ்ச்' என்ற பெயரில் சவால் ஒன்று வைரலாகி வருகிறது. 

இந்த வருடத்தின் முதல் சவாலாக டிக் டாக் செயலியில் வைரலாகி வருகின்றது தானிய  சேலஞ்ச் (cerealchallenge). காலை உணவாக உண்ணக்கூடிய பாலில் கலந்து சாப்பிடும் கான்பிளக்ஸை வைத்து இந்த சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.

வாயில் பாலை ஊற்றி கான்பிளக்ஸை போட்ட பின்னர் மற்றொருவர் அதனை ஸ்பூனில் எடுத்து உண்ண வேண்டும். இது தான் #cerealchallenge. பாலை அதிகம் வாயில் ஊற்றிவிட்டு சிரிக்கும் போது கான்பிளக்ஸை வாயில் போட்டு இந்த சவாலை எதிர்கொள்கின்றனர் சிலர்.

எது எப்படியோ விளையாட்டு வினையாகாமல் இருந்தால் சரி என சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைதளங்களில் ஆபாச கருத்து பதிவிட்டால் இனி தப்ப முடியாது; சிறப்பு பிரிவு அமைக்க நீதிமன்றம் உத்தரவு
சமூக வலைதளங்களில் ஆபாச கருத்து பதிவிட்டால் இனி தப்ப முடியாது, ஆபாச கருத்துக்கள் பதிவிடுபவர்களை கண்டறிய போலீஸ் நிலையத்தில் சிறப்பு பிரிவு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
2. பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்ற மாணவியை பாராட்டிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை
சமூக வலைதளத்தில் சாதாரணமாக மாணவி ஒருவர் தான் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கியதைப் பதிவிட அதற்கு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம் இருந்து எதிர்பாராத பாராட்டு கிடைத்துள்ளது.
3. மீண்டும் முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம்; குழப்பத்தில் பயனாளர்கள்
உலகின் பல்வேறு பகுதிகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மீண்டும் முடங்கின.
4. உலக அளவில் செயலிழந்த சமூக வலைதளம் ட்விட்டர்
உலக அளவில் தொழிநுட்ப கோளாறால் செயலிழந்து உள்ளது சமூக வலைதளம் ட்விட்டர்.
5. பேரழிவு வெள்ளத்திலும் சிக்கலான நேரத்தை ரசிக்கும் மக்கள்
வேதனையான சம்பவங்கள் நடக்கும் போதும் மக்கள் சோர்வடையாமல், ஐயோ... என்று புலம்பி அழுது ஒப்பாரி வைக்காமல் அந்த சிக்கலான நேரத்தையும் ரசிக்க கூடிய சிலர் இருக்கிறார்கள் என்று கூறலாம்.