வடகொரியாவில் புதிய ராணுவ மந்திரியாக கிம் ஜாங் குவான் நியமனம்


வடகொரியாவில் புதிய ராணுவ மந்திரியாக கிம் ஜாங் குவான் நியமனம்
x
தினத்தந்தி 22 Jan 2020 11:22 PM GMT (Updated: 22 Jan 2020 11:22 PM GMT)

வடகொரியாவில் புதிய ராணுவ மந்திரியாக கிம் ஜாங் குவான் நியமிக்கப்பட்டுள்ளார்.


* கிரீஸ் நாட்டில் முதன்முதலாக ஏகடெரினி சாகெல்லரோபவுலூ என்ற பெண்ணை அதிபராக தேர்ந்தெடுத்து உள்ளனர். இவர் சுற்றுச்சூழலியல், அரசியல் சாசன சட்ட வல்லுனர் ஆவார்.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், கரோனா நகரில் ஒரு கார் மீது வேண்டுமென்றே தனது வாகனத்தை மோதி 3 பேரை கொன்று, 3 பேரை படுகாயப்படுத்தியதாக இந்திய வம்சாவளி அனுராக் சந்திரா (வயது 42) கைது செய்யப்பட்டார். அவர் கொலைக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்.

* வடகொரியாவில் அதிரடியாக ராணுவ மந்திரி நோ குவாங் சோல் நீக்கப்பட்டுள்ளார். புதிய ராணுவ மந்திரியாக கிம் ஜாங் குவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

* ரஷியாவில் 2020-2022 ஆண்டுகளுக்கான பட்ஜெட் சட்டத்தை திருத்துமாறு தனது மந்திரிசபைக்கு புதிய பிரதமர் மிக்கேல் மிசுஸ்டின் அறிவுறுத்தி உள்ளார்.

* பட்டத்தை துறக்கும் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் கனடாவில் தங்கள் புதிய வாழ்க்கையை தொடங்கினர். தங்களை ஊடகங்கள் பின்தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹாரி எச்சரித்து இருக்கிறார்.

* அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஹாரிஸ் கவுண்டியில், முதன்முதலாக தலைப்பாகை அணிந்த துணை போலீஸ் அதிகாரி என்ற பெயரை அம்ரித் சிங் என்ற இந்திய வம்சாவளி சீக்கியர் பெறுகிறார்.

Next Story