உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 40 தலீபான் பயங்கரவாதிகள் சரண் + "||" + 40 Taliban terrorists Surrender in Afghanistan

ஆப்கானிஸ்தானில் 40 தலீபான் பயங்கரவாதிகள் சரண்

ஆப்கானிஸ்தானில் 40 தலீபான் பயங்கரவாதிகள் சரண்
ஆப்கானிஸ்தானில் 40 தலீபான் பயங்கரவாதிகள் அரசு படையினரிடம் சரணடைந்தனர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகள், அரசுக்கு எதிராக உள்நாட்டு படையினருடன் சண்டையிட்டு வருகின்றனர். இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த 2010-ம் ஆண்டு சமாதானம், நல்லிணக்க செயல்முறையை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கியது. இதன்படி தலீபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான போர்க்குணத்தை கைவிட்டு சரணடைய வழிவகை செய்யப்பட்டது. அதன்பிறகு ஏராளமான பயங்கரவாதிகள் அரசு படையினரிடம் சரணடைந்து உள்ளனர்.


இந்தநிலையில் அங்குள்ள கோர் மாகாணம் ஷாக்ராக் மாவட்டத்தில் 40 தலீபான் பயங்கரவாதிகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டத்தில் போலீசாருடன் இணைந்து ராணுவத்தினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டை மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையால் அவர்கள் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சுமார் 350-க்கும் மேற்பட்ட தலீபான் பயங்கரவாதிகள் அரசு படையிடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம்: மக்கள் ஆடிப்பாடி கொண்டாட்டம்
ஆப்கானிஸ்தானில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை மக்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.
2. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்: நீதிபதி சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பயங்கரவாதிகள் தலைமை நீதிபதியை சுட்டுக்கொன்றனர்.
3. ஆப்கானிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 8 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ஏவுகணை தாக்குதலில் அப்பாவி மக்கள் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 3 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.
5. ஆப்கானிஸ்தானில் ராணுவத்திடம் சரணடைந்த 59 தலிபான் பயங்கரவாதிகள்
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் 59 பேர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு ராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர்.