உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் 220 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்கியதால் உருவான பள்ளம் கண்டுபிடிப்பு + "||" + 220 billion years ago in Australia The discovery of the crater formed by the impact of the meteorite

ஆஸ்திரேலியாவில் 220 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்கியதால் உருவான பள்ளம் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் 220 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்கியதால் உருவான பள்ளம் கண்டுபிடிப்பு
ஆஸ்திரேலியாவில் 220 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்கியதால் உருவான பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிட்னி,

உலகின் மிகப் பழமையான விண்கல் ஒன்று 220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள யர்ராபூபாவை தாக்கி ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது பூமியின் வயதில் பாதியை கொண்டது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். யர்ராபூபா, பெர்த் நகரில் இருந்து 600 கி.மீ. வட கிழக்கில் அமைந்துள்ளது.


விண்கல் தாக்கியதில் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் பாறையில் காணப்பட்ட தாதுக்களை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர். அந்த ஆராய்ச்சியை கர்டின் பல்கலைக்கழகத்தினர் நடத்தி உள்ளனர். இதன் முடிவுகள், ‘நேச்சர் கம்யூனிகேசன்ஸ்’ பத்திரிகையில் நேற்று வெளியாகி உள்ளது.

இந்த பள்ளம், 1979-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்போது இந்த பள்ளம் எவ்வளவு பழமையானது என்பதை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் பரிசோதிக்க வில்லை என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.

பல கோடி ஆண்டுகளில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக இந்த பள்ளம், கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கிறது.

இந்த பள்ளம் குறித்து ஆராய்ச்சியாளரான பேராசிரியர் கிறிஸ் கிர்க்லேண்ட் பி.பி.சி. செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, அந்த நிலப்பரப்பு உண்மையில் மிகவும் தட்டையானது. ஏனென்றால், அது மிகவும் பழமையானது. அங்கு உள்ள பாறைகள் தனித்துவமானவை என குறிப்பிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சி: சென்னை விமானநிலையத்தில் ரூ.2½ கோடி போதைப்பொருள் பறிமுதல்
சென்னை விமான நிலைய சரக்குப்பிரிவில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு கடத்த இருந்த ரூ.2½ கோடி மதிப்புள்ள 16 கிலோ 465 கிராம் போதைப்பொருட்களை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை, மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் ரக்பி வீரர் தனது 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார்.
3. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது - கங்குலி தகவல்
இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட இருப்பதாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
4. ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பறிமுதல்: மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை
ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற ரூ.6½ கோடி போதை மருந்து பொருட்களை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5. ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவு பேய் மழை
ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் மழை பெய்து வருகிறது.