உலக செய்திகள்

பெரு நாட்டில் பேருந்து விபத்து: 6 பேர் பலி; 37 பேர் காயம் + "||" + Six people killed, 20 injured in bus accident in southern Peru; Reports

பெரு நாட்டில் பேருந்து விபத்து: 6 பேர் பலி; 37 பேர் காயம்

பெரு நாட்டில் பேருந்து விபத்து:  6 பேர் பலி; 37 பேர் காயம்
பெரு நாட்டில் பேருந்து விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
லிமா,

பெரு நாட்டின் தெற்கே டேம்பில்லோ பகுதியருகே பேனமெரிக்கானா சூர் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்நிலையில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து குறுகலான பள்ளத்தாக்கில் விழுந்தது.

இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 6 பேர் பலியாகினர்.  37 பேர் காயமடைந்தனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  பெருவில் சாலை விபத்துகள் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல.  அந்நாட்டு தேசிய போலீசார் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2019ம் ஆண்டில் கார் விபத்துகளில் 717 பேர் பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவின் நிகழ்ந்த பஸ் விபத்தில் 3 பேர் பலி - 18 பேர் படுகாயம்
அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் நிகழ்ந்த பஸ் விபத்தில், 3 பேர் பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
3. கொடைக்கானல் அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்து கேரள தம்பதிகள் உயிர் தப்பினர்
கொடைக்கானல் அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கேரள தம்பதிகள் உயிர் தப்பினர்.
4. பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்
பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
5. அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 2 விமானிகள் பலி
அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 2 விமானிகள் பலியாயினர்.