உலக செய்திகள்

சீனாவில் கொரோனா வைரஸ் சந்தையில் விற்கப்பட்ட பாம்புகள் மூலம் பரவி உள்ளது! + "||" + Humans likely got the deadly Chinese coronavirus from SNAKES sold at the Wuhan market, study suggests

சீனாவில் கொரோனா வைரஸ் சந்தையில் விற்கப்பட்ட பாம்புகள் மூலம் பரவி உள்ளது!

சீனாவில் கொரோனா வைரஸ் சந்தையில் விற்கப்பட்ட பாம்புகள் மூலம் பரவி உள்ளது!
கொரோனா வைரஸ் சீனாவின் உவான் நகரின் சந்தையில் விற்கப்பட்ட பாம்புகள் மூலம் பரவியது என கண்டறியப்பட்டு உள்ளது.
உவான்

சீனாவில் சுமார் 90 லட்சம் பேர் வசிக்கும் உவான்  நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சீனாவின் உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவை மிரட்டும் உயிர்கொல்லி வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் உவான் நகரில்  இந்த வைரஸ் எப்படி உருவாகியது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் உவான் நகரில் உள்ள  கடல் உணவு சந்தை கொரோனா வைரஸ் உருவாக காரணமாக இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த சந்தை உள்ளூர் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய வைரஸ் உவானில் திறந்தவெளி சந்தையில் விற்கப்படும் பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பல்வேறு ஒட்டுண்ணி விலங்குகளை பாதிக்கும் விகாரங்களின் மரபணுக்களை அவர்கள் ஆராய்ந்தபோது, கொரோனா வைரஸ் பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் வைரஸ் புள்ளியாக செயல்பட்டன.

மத்திய உவானில் உள்ள ஹுவானன் கடல் உணவு சந்தையில் கோலாக்கள், எலிகள் மற்றும் ஓநாய் குட்டிகள் விற்கப்படுகிறது.

எங்கள் பரிணாம பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட முடிவுகளில்  கொரோனா வைரஸ் பரவ  மிகவும் சாத்தியமான வனவிலங்கு, நீர் பாம்பு என்று முதன்முறையாக தெரியவந்து உள்ளது  மருத்துவ வைராலஜி ஜர்னலில் கட்டுரை வெளியிடப்பட்டு உள்ளது. எங்கள் பரிணாம பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட புதிய தகவல்கள், கொரோனா வைரசால் தூண்டப்பட்ட நிமோனியாவை திறம்பட கட்டுப்படுத்த முடியும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலி எண்ணிக்கை 2,663 ஆக அதிகரிப்பு
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது.
2. கொரோனா வைரஸ்: இத்தாலியில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு ; சீனாவில் பலி எண்ணிக்கை 2,592 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,592 ஆக அதிகரித்துள்ளது.
4. தென்கொரியாவில் கொரோனா வைரசுக்கு 7 பேர் பலி
தென்கொரியாவில் தீவிரமுடன் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 7 பேர் பலியாகி உள்ளனர்.
5. கிலோ உயிருடன் ரூ.49-க்கு விற்பனை: கொரோனா வைரஸ் பீதியால் கோழி விலை அதிரடி சரிவு
கொரோனா வைரஸ் பீதியால் கோழி விலை அதிரடியாக சரிந்து வருகிறது. ஒரு கிலோ கோழி (உயிருடன்) ரூ.49-க்கு தற்போது விற்பனை ஆகிறது.