உலக செய்திகள்

பிரக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல் + "||" + Queen gives approval to Brexit as bill officially becomes law

பிரக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்

பிரக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி ஒப்புதல்
பிரக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.
லண்டன்

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து  வெளியேறுவது தொடர்பான பிரக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் தொடர்ச்சியாக வரும் 31ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது.

28 நாடுகள் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக,இங்கிலாந்து  அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததை அடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. 

ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இரண்டு முறை இங்கிலாந்து  நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்களும் மாறினர். தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், பிரக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது. இந்த மாத இறுதியில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறும் முடிவிற்கான பிரக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.

இந்நிலையில் பிரக்சிட் மசோதாவுக்கு ராணி அதிகாரப்பூர்வமான ஒப்புதலை அளித்துள்ளதாக பிரக்சிட் விவகாரங்களை கவனிக்கும் செயலாளர் ஸ்டீவ் பார்க்கலே தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து ராணிக்கும் அவரது கணவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் அவரது கணவர் ஃபிலிப்பிற்கு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.