உலக செய்திகள்

இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது: சர்வதேச நிதியத்தின் தலைவர் நம்பிக்கை + "||" + India's recession is temporary: The head of the International Fund believes

இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது: சர்வதேச நிதியத்தின் தலைவர் நம்பிக்கை

இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது: சர்வதேச நிதியத்தின் தலைவர் நம்பிக்கை
இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது என சர்வதேச நிதியத்தின் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தவோஸ்,

சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் நேற்று சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா உரையாற்றினார். அப்போது உலக நாடுகளின் பொருளாதார நிலைகளை அவர் எடுத்துரைத்தார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சர்வதேச நிதியம் எதிர்பார்த்ததை விட 2020-ம் ஆண்டு ஜனவரியில் உலக நாடுகள் சற்று சிறந்த நிலையில் உள்ளன. சீனா-அமெரிக்கா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச அளவிலான வர்த்தக பதற்றம் விலகியது மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட வரி குறைப்புகள் போன்ற நடவடிக்கைகளால் இந்த நேர்மறையான காரணிகள் நடந்துள்ளன’ என்று தெரிவித்தார்.

மிகப்பெரிய சந்தையான இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானதுதான் என நம்புவதாக கூறிய கிறிஸ்டலினா, இந்த நிலையை மேம்படுத்தி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவதற்கான நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தோனேசியா, வியட்நாம் நாடுகளில் சில பிரகாசமான வாய்ப்புகள் தெரிவதாகவும், ஆப்பிரிக்க நாடுகள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். எனினும் மெக்சிகோ போன்ற சில நாடுகள் பின்தங்கி இருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரிட்டன், பிரான்சை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா
உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியிருப்பதாக அமெரிக்காவைச்சேர்ந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2. இந்தியா-நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது
ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு பெருத்த ஏமாற்றம் அளித்தது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது.
3. இந்தியா-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது ரஹானே சதம் அடித்தார்
இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லின்கானில் நடந்தது.
4. இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண மேலாண்மை ஆணையம் இலங்கை மந்திரி சிறப்பு பேட்டி
இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பாக் நீரிணை-மன்னார் வளைகுடா கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும் என்று இலங்கை மந்திரி டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
5. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ; இந்தியா முதலில் பந்து வீச்சு
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.