ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தம்: போரிஸ் ஜான்சன் கையெழுத்து


ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தம்: போரிஸ் ஜான்சன் கையெழுத்து
x
தினத்தந்தி 25 Jan 2020 9:43 PM GMT (Updated: 25 Jan 2020 9:43 PM GMT)

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்திட்டார்.

பிரசல்ஸ்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கான முறையான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கையெழுத்து போட்டார்.

லண்டனில் டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் முன்னிலையில் அவர் ை-யெழுத்து போட்டார்.

முன்னதாக இந்த ஒப்பந்தத்தை பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் இருந்து இங்கிலாந்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கொண்டு வந்தனர். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதை இங்கிலாந்து வரலாற்றில் புதிய அத்தியாயம் என பிரதமர் போரிஸ் ஜான்சன் வர்ணித்தார்.

இந்த ஒப்பந்தம், மீண்டும் பிரசல்ஸ் எடுத்துச்செல்லப்படுகிறது. ஐரோப்பிய நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் 31-ந் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story