உலக செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது + "||" + European Union MPs Resolution Against Citizenship Amendment Act: Is filed in Parliament

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
லண்டன்,

இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் 150-க்கும் மேற்பட்டோர் 5 பக்க தீர்மானம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அடுத்த வாரம், பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதில் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய அரசு, சிறுபான்மையினரின் குடியுரிமையை சட்டரீதியாக பறிப்பதற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை உருவாக்கி உள்ளது. அந்த சட்டம் பயன்படுத்தப்பட்டால், ஏராளமானவர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்படுவார்கள்.

குடியுரிமை தொடர்பான சர்வதேச கடமைகளை மீறும்வகையில் இந்தியா இச்சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இது, அடிப்படையிலேயே பாரபட்சமானது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் சுட்டிக்காட்டி உள்ளார். ஆகவே, ஐரோப்பிய யூனியன் தலையிட்டு மனித உரிமைகளை காப்பதுடன், இந்த சட்டத்தை நிறுத்திவைக்க செய்ய வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி
கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்துகொண்டது.
2. குடியுரிமை திருத்த சட்டத்தை புதைத்துவிட வேண்டும் - மதுரை போராட்டத்தில் வைகோ பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்தை அடியோடு புதைத்துவிட வேண்டும் என்று மதுரை போராட்டத்தில் வைகோ பேசினார்.
3. இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் நாட்டின் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் - அமெரிக்கா
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) தெரிவித்துள்ளது.
4. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: போலீசார் தடுத்து நிறுத்தியதால் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது, மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதால் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்ற முற்றுகை போராட்டம்: இஸ்லாமிய அமைப்பினர் பேரணி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் தடையை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட இஸ்லாமிய அமைப்புகளின் பேரணி தொடங்கியது.