அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவு


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவு
x
தினத்தந்தி 26 Jan 2020 9:55 PM GMT (Updated: 26 Jan 2020 9:55 PM GMT)

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அமாடிக்னாக் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது.


* பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மினாஸ் ஜெராய்ஸ் மாகாணத்தில் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி 30 பேர் பலியானதோடு, 17 பேர் மாயமாகி உள்ளனர்.

* துருக்கியின் இலாஜிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரிஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்கனவே 22 பேர் பலியான நிலையில் நேற்று முன்தினம் இடிபாடுகளில் இருந்து மேலும் 9 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

* பெரு நாட்டின் தலைநகர் லீமாவில் கடந்த வியாழக்கிழமை கியாஸ் டேங்கர் லாரி ஒன்று ஆட்டோ பழுது பார்க்கும் கடை மீது மோதி வெடித்து சிதறியதில் பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது.

* அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அமாடிக்னாக் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

Next Story