உலக செய்திகள்

அமெரிக்காவில் வினோதம்: எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர் + "||" + Strange in the United States: An Old Man Traveling With a Skeleton

அமெரிக்காவில் வினோதம்: எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்

அமெரிக்காவில் வினோதம்: எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்
அமெரிக்காவில் எலும்புக்கூடுடன் முதியவர் ஒருவர் பயணம் செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நியூயார்க்,

அமெரிக்காவின் ஒரு சில மாகாணங்களில் இருக்கும் நெடுஞ்சாலைகளில் ஒருவருக்கு மேல் பயணிக்கும் கார்களுக்கு என தனி வழித்தடம் உள்ளது. இதில் சாதாரண வழித்தடத்தில் இருக்கும் அளவிற்கான போக்குவரத்து நெரிசல் இருக்காது.


சில கார் டிரைவர்கள் காரில் தங்களுடன் ஆட்கள் இருப்பதுபோல் காட்டி விதிகளை மீறி தனி வழித்தடத்தில் பயணிப்பதும், அவர்களை போக்குவரத்து போலீசார் பிடித்து அபராதம் விதிப்பதும் அவ்வப்போது நடக்கிறது.

இந்த நிலையில் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த 62 வயதான முதியவர் ஒருவர் தனி வழித்தடத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக எலும்புக்கூடுக்கு தொப்பி அணிவித்து காரின் முன்இருக்கையில் அமர வைத்து, காரை ஓட்டி சென்றார்.

அவர் நினைத்தபடியே அவரது கார் தனி வழித்தடத்தில் சென்றது. ஆனால் காருக்குள் இருப்பது எலும்புக்கூடு என்பதை போக்குவரத்து போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். உடனடியாக அந்த காரை தடுத்து நிறுத்தி முதியவரை பிடித்தனர்.

பின்னர் அவருக்கு அபராதம் விதித்த போலீசார் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. 5 சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த ஊழியர்
அமெரிக்காவில் பீர் தொழிற்சாலையில் 5 சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைச் செய்து கொண்ட ஊழியர்.
2. அமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன் மரணம்
அமெரிக்காவை சேர்ந்த பெண் கணித மேதை கேத்தரின் ஜான்சன். மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த இவர், வயோதிகம் காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101.
3. அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து சாவு
அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து உயிரிழந்தார்.
4. அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. அமெரிக்காவின் நிகழ்ந்த பஸ் விபத்தில் 3 பேர் பலி - 18 பேர் படுகாயம்
அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் நிகழ்ந்த பஸ் விபத்தில், 3 பேர் பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.