குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் 30 நகரங்களில் போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் 30 நகரங்களில் போராட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2020 9:30 PM GMT (Updated: 27 Jan 2020 9:30 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமெரிக்காவில் 30 நகரங்களில் போராட்டம் நடந்தது.

வாஷிங்டன்,

இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, அமெரிக்காவில் போராட்டம் நடந்தது. அமெரிக்கவாழ் இந்தியர்கள் இப்போராட்டங்களை நடத்தினர்.

வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, ஹூஸ்டன், அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ உள்பட 30 நகரங்களில் போராட்டம் நடந்தது. சிகாகோவில் நடந்த போராட்டத்தில், பெருமளவிலான இந்தியர்கள் பங்கேற்றனர். அவர்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மனித சங்கிலியாக நின்றனர். வாஷிங்டனில், வெள்ளை மாளிகை அருகே ஒரு பூங்காவில் இருந்து இந்திய தூதரகம்வரை ஊர்வலம் சென்றனர். பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

அதே சமயத்தில், அவர்களுக்கு குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவான பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த போராட்டங்களால் அமெரிக்காவில் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டன.

வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய துணை தூதர் அமித் குமார் தேசிய கொடி ஏற்றினார்.

Next Story